love

வார்த்தையல்ல காதல்
-பூங்காற்று தனசேகர்,*

துக்கத்தின் போதே துக்கப்படாதவன்
ஆறுதல் சொல்லியேஅழவைத்தவள் நீ*
மனிதர்கள் யாருமற்ற கோள் ஒன்றிற்கு
சென்றுவிடலாமா என்று கேட்டாய்
இப்பொழுதுபூமியில் நம்மைத் தவிர
வேறு யார் இருக்கிறார்கள்என்றேன்

என் கண்களை நீ பொத்தும்போது
மட்டும் வெளிச்சமாயிருக்கிறது

சதையல்ல இதயம்
காற்றல்ல மூச்சு
வார்த்டகியல்ல காதல்
பூமியில் உள்ள அனைத்து
காதல் கவிதைகளையும்தின்றுவிட்டு
ஏப்பமாய் விடுகிறாய் ஒரு புன்சிரிப்பை

- பூங்காற்று தனசேகர்
bharathi says
விடுதலை! விடுதலை! விடுதலை!
பறைய ருக்கும் இங்கு தீயர்
புலைய ருக்கும் விடுதலை
பரவ ரோடு குறவருக்கும்
மறவ ருக்கும் விடுதலை!
திறமை கொண்டதீமை யற்ற
தொழில் புரங்ந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே
(Bharathiyar)